உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று மாலை 10 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பித்தோராகர் மாவட்ட வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளதாவது: 10 வயது சிறுவனும், அவனது தங்கையும் லாத்ரி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிறுவனின் பின்பக்கத்திலிருந்து சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கியுள்ளது. […]