பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய கூட்டமைப்பு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனாவால் உலகமே அஞ்சி இருக்கும் நிலையில் தடுப்பூசியை மட்டுமே உலக மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில், வளர்ச்சியடைந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரித்து வழங்கி உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. ஏழை நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. […]