10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி […]
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி […]