மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் ஜூலை 18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. […]