பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கொரோனா வைரஸ் நீங்கவும்,மக்கள் ஆரோக்கியம் சீராகவும் ,நோயிலிருந்து மக்களை பாதுக்காக்க வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பதூரில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் 10 கலசங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஹோமம் தொடங்கியது.பின்னர் புனித கலச நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும் வைரஸ் தடுக்கவும் வேண்டி புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பகுதியில் உள்ள பஞ்சமூக ஆஞ்சநேயர் கோயிலில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகா சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.ஹோமத்தின் முடிவில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் உட்பட பல இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்ற மத்திய-மாநில அரசுகளின் அறிவுறுத்தலால் மகா சாந்தி ஹோமத்தில் ஒரு […]