நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் சமீபத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தின. ஏற்கனவே திமுக அதிமுக சார்பில் தேர்தல் […]
உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று நடைப்பெற்றது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற உபி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மட்டும் தப்பிக்க முடியாது: இதைதொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாடு […]
பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல்லில்(வேடசந்தூரில்) நடந்த கூட்டமொன்றில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும்,அவர்களது வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக,விருதுநகரைச் சேர்ந்த ஒருவரால் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து,புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு […]
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதை அடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும்,முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.ஈரோடு காவல்நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்,இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. […]
அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே தண்ட செலவு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுசெயலாளர் முரளிதர ராவ் தலைமையில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் 600 ஏக்கர் கோவில் நிலத்தை வசிப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்க இருப்பது கண்டிக்கதக்கது. கோவில் நிலங்களில் தான் வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமா ஏன் புறம்போக்கு நிலங்களில் கொடுக்கலாமே […]
விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர் ஆவார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளயிட்டது தேமுதிக. அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் […]
பா.ஜ.க.,வோ, ராஜாவோ சிலைகளைச் சேதப்படுத்துவதை விரும்பவில்லை என ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சிலைகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.எனது அட்மின் செய்த தவறுக்காக நான் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சி நிகழ்ச்சிக்காக விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அட்மின் பதிவிட்டுள்ளார்.பதிவையும், அட்மினையும் நீக்கிவிட்டேன். பிறர் செய்வதைக் காரணம் காட்டி நானும் அதையே செய்ய விரும்பவில்லை.யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல; வருந்துகிறேன்.வன்முறை இருதரப்பிலும் நடப்பது ஏற்கத்தக்கதல்ல ; அமைதி காக்க […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும், ராஜாவாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சிலை உடைப்பு போன்ற செயல்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் பதிவை அட்மின் (Admin) என் அனுமதி இன்றி பதிவுசெய்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் […]