Bangalore: கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் மிகப்பெரிய தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பக்கமாக சாய்வதை பார்த்து பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.