ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய், புதன் கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலத்தில் […]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையில் சிக்கி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள ஹிமாச்சலப்பிரதேச பேரிடர் மேலாண்மை கழகம், கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தற்போது 123 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் தோட்ட விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கும் ரூ.1,108 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழையால் கடந்த 130 நாட்களில் 12 பேர் மாயமாகி […]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் அருகில், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்துள்ளது. இதன் காரணத்தால் இன்று காலை அந்த ரயில்தடத்தில் வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 9 பயணிகள் இருந்துள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, இமாச்சல பிரதேச அரசு இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குடியிருப்பு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 21 வரை மூடப்படும். கொரோனா நிலைமை காரணமாக இமாச்சலப் பிரதேச அரசு வழக்கமான வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 வரை இடைநிறுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. […]
இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாச்சலப்பிரதேசம் மாறியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஹிமாச்சல் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஹிமாச்சல் பிரதேசம் இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ காரணமாக இருந்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார். பிரதமர் மோடி […]