ஹிந்தியில் கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம், இயக்குநர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்து கொண்டு, ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தற்போது ஷாருக்கானை இயக்கி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார். அவர் கடைசியாகஇயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,100 கோடி வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, பிரபல […]
பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்துள்ளதா திமுக? என அண்ணாமலை கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் தமிழகத்தில் தமிழில் […]
போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் ஏபிஎஸ் தலைமையில், போராட்டம் நடைபெற்ற நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஈபிஎஸ் உள்ளிட்டோரை பார்க்க ஜி.கே.வாசன் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன், சட்டசபையில் இபிஎஸ் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் […]
தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது என கனிமொழி பேட்டி. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு; தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. மேலும், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல; அது அலங்காரமாக இருந்தாலும் சரி, […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள் குறித்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஹிந்தி ரீமேக்கை தர்மேந்திர சர்மா அவர்கள் இயக்குகிறார்கள். இந்நிலையில் […]
கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான தான். ஆனால் ஆங்கிலத்தை நாம் அரவணைக்காவிட்டால் ஹிந்தி உள்ளே நுழைந்து விடும் என தெரிவித்துள்ளார். மேலும் நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதனை கற்றுக்கொள்ளலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு […]
ஒரே நாடு ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்துவது தான் அமித்ஷாவின் நோக்கம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கர் பிரகாஷ் ராஜும் தற்போது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள். ஒரே […]