இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலராக தற்போது ஹர்ஷ்வர்தன் ஷிரீங்கலா பணியாற்றி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் அவர் ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, தற்போது புதிய வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி, இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேபாளம் நாட்டிற்கான இந்திய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.