மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள, ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, நடப்பு ஆண்டுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ள […]