சென்னை:மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடு திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு,அதன்பின்னர் லேசான இருமல் இருந்ததையடுத்து,பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,நவம்பர் 22 ஆம் தேதியன்று அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து,கொரோனா பாதிப்பால் சிசிக்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக நவ.26 […]