உலகபிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் கொரோனா பரவலை தடுக்க வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் உலக முழுவதும் தனது கோரத்தொற்றால் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டியும் மக்களின் நோய்நோடியின்றி அரோக்கியம் சிறக்கவும் வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கோவில் நிர்வாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை தொடங்குகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறுகின்றது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் சுவாமி ஹம்ச வாகனத்திலும், 2வது நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3வது நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4வது நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5வது நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6வது நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விசேஷ விழாவில் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பு பெற்றது.அதில் சொர்க்கவாசல் திறப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.இதன் படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியானது நாளை முதல் தொடங்குகிறது. மேலும் வருகின்ற 30 தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதமும், அரையர் தீர்த்தமும், சடகோபாம் சாதித்தலும் நடைபெறுகிறது. இநிலையில் […]
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை வழங்கி வருவது வழக்கம்.இதன் […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.தினமும் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டமானது நாளை காலை நடைபெறுகிறது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரானது நான்கு உத்திர வீதிகளில் கோவிந்தா கோஷத்தில் பவனி […]