3 நாள் தமிழக பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்று தனி விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் மோடி. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. காலை 11 மணி முதல் 12.30 மணி வரையில் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி […]
இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். அப்போது, கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும் பங்கு உண்டு, கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் […]
கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தையும், புதிய உலர் கப்பல் துறையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் அதற்காக நேற்று இரவு கேரளா வந்தடைந்தார். பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.? டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, கேரள […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. கோவிலுக்குள் பிரச்சனையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பக்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ரத்தம் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. […]
திருச்சியில் விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே ஒரு கிராமத்தில் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு விதிகள் மீறி கட்டப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும் என […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் ஹோமம், மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்தபிப்.,21முதல் நாளில் மஹாகணபதி ஹோமம், சங்கீத உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், திருப்புகழ் ,தேவாரம்,இன்னிசை என்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் பூர்ண புஷ்கலா தர்மசாஸ்தா திருக்கல்யாணம், சிவபூஜை, தியான கீர்த்தனைகள், சிவ திவ்யநாமம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவைகள் வெகுச்சிறப்பாக நடைபெற்றன.பிப்.,24 நாள் 3ம் நாளான நேற்று மீனாட்சி […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா நிகழ்வானது கடந்த 30ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. இவ்விழாவின் 4ம் நாளான பிப்., 2ந்தேதி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். 8ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்தர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டு அருளினார்.இவ்விழாவின் […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக […]
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் […]