எலோன் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை அண்டார்டிகாவை வந்தடைந்ததாக தேசிய அறிவியல் அறக்கட்டளை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் தனது துருவ சேவையை மெக்முர்டோ நிலையத்தில் புதிதாக பயன்படுத்தப்பட்ட பயனர் முனையத்துடன் சோதிப்பதாக கூறியது. “ஸ்டார்லிங்க் இப்போது ஏழு கண்டங்களிலும் உள்ளது! அண்டார்டிகா போன்ற தொலைதூர இடத்தில், இந்த திறன் ஸ்டார்லிங்கின் ஸ்பேஸ் லேசர் நெட்வொர்க்கால் செயல்படுத்தப்படுகிறது” என்று ஸ்பேஸ்எக்ஸ் ட்வீட் செய்தது. NSF-supported USAP scientists in #Antarctica are over the […]
முதல் முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களில் 4 பேரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4பேர் கொண்ட […]
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எறும்புகள்,அவகோடா பழங்கள், ஐஸ்கிரீம் மற்றும் ரோபோ கை ஆகியவற்றை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. முதல் முறையாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எறும்புகள், இறால்கள், வெண்ணெய் ,அவகோடா பழங்கள் மற்றும் மனித கை அளவிலான ரோபோ கைகள், ஜீரோ க்ராவிட்டி ஆராய்ச்சி பொருட்கள், விண்வெளி வீரர்களுக்கான உணவு, ஐஸ் கிரீம் போன்ற ஏராளமான பொருட்களை அதன் ட்ராகன் கார்கோ ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) விண்ணில் ஏவியுள்ளது. இது ஸ்பேஸ் […]