மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து கண்டன பேரணியும் ,பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு. கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து 197 பேரை கைது செய்தனர். இதில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம், FCI ரவுண்டானா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக துணை வட்டாட்சியர்கள் புகாரில் தெரிவித்திருந்தனர். தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ரவுண்டான அருகிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அதற்கு உத்தரவிட்டது யார் […]
தமிழகத்தில் தற்போது நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடைபெற்ற திட்டமிட்ட சம்பவங்கள் போல் இருக்கிறது என ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடிக்கு நெருக்கமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை ஆரம்ப முதலே சட்டவிதிகளுக்கு மாறாக மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இயங்கி வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான […]
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ம் தேதி முதலே தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள்.திங்களன்று அவர்கள் ஏழாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் சிலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இந்தோனேசியா வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் ஜகர்தாவில் தென்கிழக்காசிய தமிழ்ச்சங்கம் மற்றும் இந்தோனேசிய தமிழ்க் கலாச்சாரப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு வசிக்கும் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றிணைந்து முழக்கங்களை எழுப்பினர். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி, புற்றுநோயை உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியதனை அடுத்து இன்று 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை அமைச்சர்கள் மற்றும் […]
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் […]