தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று பார்வையிட்டார். பின்னர் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று […]