ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கத் தயாரா? தமிழக அரசுக்கு நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி…!
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கும் தமிழக அரசு, இவ்விஷயத்தில் அரசின் கொள்கையை தெளிவுபடுத்தாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:நான், வழக்கறிஞராகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்திருக் கிறேன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை […]