வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் […]
கோமா நிலைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி. முன்னதாக, 1991-96 காலகட்டத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி,காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறிய தனது கணவர் பாபுவுக்கு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால்,அவ்வாறு பெறப்பட்ட நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து,அரசின் நிதியை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் […]
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம், அரிசிப்பளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார்-ராஜலட்சுமி தம்பதியின் மகள் ஜனனி (14). இவர் சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், தந்தை கைவிட்ட நிலையில், தாயின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இதனையடுத்து, முதல்வர் […]