Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். […]