கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150 ஆவது பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இவரது முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. இவர் தனது 6 வயதிலேயே வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணன் என்பவரிடம் ஆங்கிலம் பயின்றுள்ளார். அதன் பின்பு தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியிலும், கால்டுவெல் பள்ளியிலும் கல்வி […]