கொவிட்-19 விவகாரம்… தலைநகருக்கு கட்டுப்பாடு விதித்தார் முதல்வர் கெஜ்ரிவால்…
மத்திய, மாநில அரசுகள் கொவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற 31-ந் தேதி வரை மத வழிபாடுகள், சமூக, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள்,போராட்டங்கள்போன்றவை டெல்லியில் அனுமதிக்கப்படாது என மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். […]