Tag: வைகை

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு எச்சரிக்கை

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணையை சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்வதால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் இறங்க, குளிக்க, புகைப்படங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

vaikai 2 Min Read
Default Image

பல ஆண்டாக தூர்வாரப்படாமல் இருக்கும் வைகை அணையின் அவல நிலையை கவனிப்பாரா விவசாயிகளின் முதல்வர்…

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் உபரிநீரை தேக்கி வைக்கவும், மூல வைகையாற்றில் வரும் நீரை தேக்கி வைக்கவும் 1958ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்டத்தின் ஆண்டிபட்டியில் வைகை அணை கட்டப்பட்டது. இந்த வைகை அணை தூர்வாரப்படாமலே பல ஆண்டுகாலமாக இருப்பதால்  நீர்த்தேக்க பகுதியில் மலை போல் குவிந்துள்ள வண்டலால், அணையின் கொள்ளளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் நீர் இங்கு தேங்க முடியாமல்  மேகமலையில் உள்ள நீரோடைகளும் தங்களின்  திசை மாறி ஓடுவதால், அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக […]

சிறப்பு தொகுப்பு 4 Min Read
Default Image

ஆற்றில் அழகர் இறங்குவதை முன்னிட்டு..!!வைகையில் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது..!!

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது கடந்த ஆண்டு அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் திறக்க படவில்லை ஆனால் சில நாட்களாக பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து தொடந்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 37.96 அடியாக இருந்தது  மொத்தம் 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை,ஆண்டிபட்டி,சேடபட்டி ஆகிய […]

ஆன்மீகம் 2 Min Read
Default Image

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக 40 மாட்டுவண்டிகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 40 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து சிறப்பு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த மணல் கொள்ளையின் பின்னணி என்ன..?? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

sivagangai 1 Min Read
Default Image

வைகையில் தண்ணீர் திறக்க கோரி நடந்த மறியல் வாபஸ்

வைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர்  அறிக்கை விடுத்ததன் பின்னர், இப்ப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த 7 நாட்கள் தண்ணீர் பத்தாது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

#Madurai 1 Min Read
Default Image