மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது.ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில்துறை அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். மேலும் பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து போராட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துள்ள நிலையில் செப்.,25ம் தேதி ‘பாரத் பந்த்’ நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவைகள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவினை எதிர்த்து, மத்திய தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் […]