2022-23- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில்,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.அந்த வகையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுவாக,உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில்,மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்படவேண்டும் என்று […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில்,முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செல்போன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். குறிப்பாக,பம்பு செட்டுகளை இயக்க இரவு […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருந்த நிலையில்,50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வேளாண் துறை அமைச்சர் வெளியிட்டு வருகிறார் இந்நிலையில்,தமிழத்தில் இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார் சிறுதானிய மண்டலங்கள்: […]
2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.இதனிடையே,பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பின் இன்று காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் […]