தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை முன்வைத்து நாளை (ஜனவரி 9ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஏற்கனவே, கடந்த 3ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 8ஆம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்தையானது சென்னை தேனாம்பேட்டையில் […]
போக்குவரத்து ஊழியர் சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர் சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும், இதற்கான நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் அதிகளவில் விற்பனையாக கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. […]
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக […]
நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி […]