தினமும் வீட்டில் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் வேர்க்கடலையில் விட்டமின் ஏ, விட்டமின் பி3 போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்று. இந்த வேர்க்கடலைக்கு உடலில் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை நம்மால் தவிர்க்க முடியும். வேர்க்கடலையில் அதிகமான அளவில் இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. […]