Election2024 : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை […]
Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை தமிழ்நாட்டில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இருக்கும் நிலையில், நாம் தமிழர் தன்னிச்சையாக களம் இறங்கியுள்ளது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் […]
Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது. இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் […]
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளர் அதிகாரம் கொடுக்கப்படுவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும்,அதன் முடிவு 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்திருந்தது . அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி […]
ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க சென்ற அதிமுக தொண்டர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து வருகிற 7ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலரும் […]