தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் (டிசம்பர் 17 மற்றும் 18) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் முதலமைச்சரின் பயணத்தில் மீண்டும் மாற்றம் இன்றிரவு மதுரை சென்று அங்கிருந்து நெல்லை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தென் மாவட்ட […]
சென்னை:மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான வல்லுநர் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.இதன்காரணமாக,மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் விதமாகவும் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் போன்ற பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி […]
ஆந்திரா:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால்,குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து,நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் […]
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மணலி புதுநகர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தற்போதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு […]
மழை பாதிப்பு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், போரூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில், உணவை ருசித்து பார்த்து தரத்தை ஆய்வு செய்தார். அதன்பின், ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வரிடம், அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், […]
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஓபிஎஸ் , ஈபிஎஸ் அறிக்கை. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘தமிழ் நாடு முற்றிலும் வெள்ளக் […]
சென்னை:பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம்,வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பார்வையிட்ட முதல்வர்,இன்று துறைமுகம்,ராயபுரம்,ஆர்கே நகர் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.குறிப்பாக,துறைமுகம் பகுதியில் கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பார்வையிட்ட முதல்வர் […]
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு உணவு,மருந்துகளை அளிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள். நேற்று இரவு முதல் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதேபோல,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் இதே நிலை உருவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு 200 மில்லி மீட்டருக்கும் அதிக மழை சென்னையில் பெய்துள்ளது. இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை […]
வடசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.இதனையடுத்து,சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.இதனால்,சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 […]