TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு. கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் […]
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு தரப்பில் வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 அறிவிக்கப்பட்டது. அந்த வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக தாமிரபரணி ஆறு நிரம்பியதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் இருமாவட்ட மக்கள் முழுதாக மீளவில்லை என்றே கூற வேண்டும். தடுக்கி விழுந்த நடிகர் விஜய்! கடுப்பாகி நிர்வாகியை தாக்கிய புஸ்ஸி ஆனந்த்! கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் […]
தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. திருநெல்வவேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. தூத்துக்குடி வெள்ளம் : 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. யார் யார் எந்தெந்த பகுதிக்கு.? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு பலரும் தங்கள் உதவிகளை, நிவாரண பொருட்களை அனுப்பி […]
சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் கொருக்குப்பேட்டையில் நேற்று முன்தினம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருள்கள் பெறுவதற்காக ஏராளமானோா் வரிசையில் காத்து நின்றனா். அதில், நிவாரண பொருட்கள் வாங்க வந்த தண்டையாா்பேட்டை சாஸ்திரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த யுவஸ்ரீ (14) என்ற சிறுமி ஒருவர் காத்திருந்தாா். நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து சென்றுவிட்டார். அப்போது, நிவாரண பொருட்கள் வாங்க கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்த […]
மிக்ஜாம் புயலினால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் , தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்,சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]