தென் தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் அதி கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் இந்த […]
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணையை சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்வதால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் இறங்க, குளிக்க, புகைப்படங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிம்லாவின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலி. மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் . இதைத்தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுவில் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது . வெள்ளத்தில் ஏறத்தாழ 4பேர் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சோஜ் கிராமத்திலும் மேகம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் 4 முதல் 6 பேர் காணவில்லை எனக் கூறப்படுகிறது .
வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக் கூடிய பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணத்தினால் ஆற்றின் கரை உடைந்து விட்டது. இதனால் அதன் அருகில் உள்ள பல்வேறு […]
சொரக்காய்ப்பேட்டை அரசுப்பள்ளியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கட்டடங்கள் உருகுலைந்த நிலையில், வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் பெரும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வீடுகளின் கூரை வரை சூழ்ந்து காணப்படும் நிலையில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் […]