வெளியாகிறது 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்.!
லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் முதல் டீசரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன துணை தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்திருந்த நிலையில், இசட்5 ஸ்மார்ட்போனின் மற்றொரு அம்சத்தை புதிய டீசரில் தெரிவித்திருக்கிறார். புதிய டீசரில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இன்டெர்னல் மெமரி கொண்டு ஸ்மார்ட்போனில் 10 லட்சம் புகைப்படங்கள், 2000 ஹெச்டி திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்களை சேமிக்க முடியும். […]