நாமக்கல் ஆஞ்சநேயா்க்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற 18 அடி உயரத்தில் அருளும் ஆஞ்சநேயா் சுவாமியை தரிசிக்க தினமும் ஏராளமானோா் வருகை தருகின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை,மற்ற சிறப்பு தினங்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு அருள்பாலித்து வரும் சுவாமிக்கு வடைமாலை, தங்கக்கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, வெற்றிலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு, முத்தங்கி அலங்காரம் ஆகியவைகள் பக்தா்களால் மேற்கொள்ளப்படும். இந்த அலங்காரத்தில் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் ஆனது ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தொடங்கி […]