சேலம் பூலாவரி கிராமத்தில் உள்ள இல்லத்தில் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா, திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு […]