தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம் செய்கிறார். திண்டுக்கல் தோட்டனுாத்துவில் ரூ.17.17 கோடி செலவில், இலங்கை தமிழர்களுக்காக 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளிடம் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 321 பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார். முதல்வர் வருகையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் அமைச்சர் சக்கரபாணி, பெரியசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
டெல்லி:வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் வீடில்லாத 18 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது முதல் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடி நிதி வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன.அதன்படி,வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் […]