தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார் சத்திரத்தில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்போன் உதிரிபாகம் தயாரிக்கக்கூடிய தனியார் தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பூந்தமல்லியில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு விஷத்தன்மை கொண்டதாக மாறியதால், பல பெண்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற […]