அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முடிவடைந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சோளம் மற்றும் பருத்தி ஆகிய ஐந்து பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு […]
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம், பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் கடனை தள்ளுபடி என 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பேரணி போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாய அமைப்பினர் மற்றும் […]
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் பயிர்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ‘டெல்லி சலோ’ என்று தலைநகரை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க டிராக்டர் மூலம் பேரணியாக டெல்லியை நோக்கி படையெடுத்து வரும் விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானாவின் ஷம்பு எல்லையில் குவிந்து வருகின்றனர். இதனால் […]