MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மற்றும் கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த சூழலில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வரும் தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் […]
புயல் எச்சரிக்கை தொடர்பாக 6 மாவட்டங்களில் இன்று இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், மாவட்ட தலைமை அலுவகங்கள் 24 மணிநேரமும் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதால், வடதமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள இன்று தலைமை செயலர் இறையன்பு தலைமையில் அனைத்து துறை செயலர்களும் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் வருவாய் நிர்வாக […]
விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவு பிறப்பித்தார்.
விழுப்புரம் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து,இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. நேற்று விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற அரசு பேருந்தில் 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஓட்டுநராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் மாணவிக்கு, நடத்துனர் பாலியல் […]
தமிழகம்:கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 மாவட்டங்களில் பள்ளி, […]
விழுப்புரம்:நடப்பு ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்,எனவே இவர்களுக்கு ஒரு திட்டத்தை முதல்வர் வடிவைக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய […]
சென்னை:மழை வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புக்கு ஆளும் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி,அவர்களது மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வட கிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடலூர் […]
விழுப்புரம்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி சாட்சி விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்,இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. […]
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டக் கழக செயலாளருமான சிவி சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பை திடீரென்று வாபஸ் பெற்றதை அதிமுக சார்பில் கடுமையாக கண்டிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “முன்னாள் […]
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கானது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஜரான நிலையில், முன்னாள் […]
பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் சித்தூருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், துளசியின் செல்பேசியை பார்த்துள்ளார். அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை […]
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது இந்நிலையில்,மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
விழுப்புரத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், நேற்று (மே9) மட்டும் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 4 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை […]
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி காதலின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.தான் […]
போலி ஆதார் கார்டு மூலம் ரூம் புக் செய்து ரூமில் இருந்த 22 இன்ச் டிவியை திருடி சென்ற வாலிபர். போலி ஆதார் கார்டு மட்டுமே இருப்பதால் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் இளைஞரை தேடி வருகின்றனர். விழுப்புரத்தில் முக்கிய பகுதியில் இயங்கி வரும் கே.வி.ஆர் லாட்ஜில் ஒரு இளைஞர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அவரின் ஆதார் கார்டை வாங்கி லாட்ஜ் ஊழியர்கள் ரூம் புக் செய்துள்ளனர். அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று உடனே சிறுது […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை […]
விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். விழுப்புரத்திலிருந்து சென்னை வந்த அரசுப் பேருந்தை, வழுதரெட்டி என்ற இடத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து வந்த அரசு பேருந்தும், பண்ருட்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் கல்வீச்சில் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. கல்வீச்சுச் சம்பவங்கள் தொடர்ந்ததால் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்குத் திரும்பிச் சென்றன. விழுப்புரத்தில் […]