ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் துாக்கி சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி இந்த கிராமத்தில் தற்போது கனமழை செய்த காரணத்தால் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடதி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30ம் தேதி அங்கு சென்றார். இந்நிலையில் பாதையானது சேறும், சகதியுமாக இருந்த காரணத்தால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றுள்ளார். […]