உத்திரபிரதேசத்தில், சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி. ஐஏஎஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, உத்திர பிரதேசத்தில் போக்குவரத்துத் துறையில் சிறப்புச் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சாலையோர கடையிலிருந்து காய்கறி விற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மிஸ்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் சில வேலைகளுக்காக பிரக்யாராஜுக்கு சென்றேன். திரும்பும் வழியில் காய்கறிகளை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கு தற்போது மே 17 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் நேற்று முதல் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே மதுக்கடைக்கடைகளின் முன் மதுப்பிரியர்கள் கூட தொடங்கிவிட்டனர். மதுக்கடைகளில் 5 […]
கொரோனா தொற்றால் நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தப்போதிலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்காக சில உத்தரவுகளை முதல்வர் அவ்வபோது பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் குறைந்த அளவில் இறைச்சி கடைகள் செயல்பட்டன. இன்று ஞாயிறு என்பதால் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியோடு குவிந்தனர்.இந்நிலையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினால் 2,000 ஆயிரம் இறைச்சிக் கடைகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்க்கு அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐநா சபை, மத்திய அரசின் கூட்டு திட்டம் முதலியவற்றில் தனது மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். இவர், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் மூலிகைப் பெட்ரோல் விற்பனையை தொடங்கியுள்ளார். இதற்க்காக தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தும் விழா ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமர் பிள்ளை பேசுகையில் […]
தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டதுள்ளது.அதன்படி ஒரு சவரன் தங்கம் நேற்று மட்டும் 31 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறுமுகமாக இருந்து வருகிறது. சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.அதன்படி நேற்றுமாலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு 312 ரூபாய் விலை உயர்ந்தது.ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து […]
குடிபோதையில் இருந்த தந்தை தன் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரத்தில் 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் இரண்டாவது மனைவி பணிக்கு செல்வதால் தன் 8 மாத குழந்தையை ராஜதுரையே பராமரித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையோடு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய பேருந்தில் ராஜதுரை சென்று உள்ளார். குடிபோதையில் தள்ளாடியவாரே பேருந்தில் குழ்ந்தை […]