இன்று 'திருமண விரதம்' எனப்படும் பங்குனி உத்திரம்..!விரதமும்..பலனும்

பங்குனி மாதத்தில்  உத்திர நட்சத்திரமும் ,பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி  உத்திரமாகும்.சிவபெருமானை கல்யாண சுந்திரமூர்த்தியாக அனுஷ்டிக்கும் விரதமாகும்.மேலும் இதனை திருமண விரதம் என்று கூறுவர். மேலும் இவ்விரதத்தை  முருகனுக்குரிய விரதங்களில் ஒன்றாகும். மேலும் சாஸ்தா,சிவன்,விஷ்ணு ஆகிய  தெய்வங்களுக்குரிய நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.இந்த தினத்தில் தான் இந்திரன் மகளான தெய்வாணையை பங்குனி உத்திரத்தில் முருகன் கரம் பிடித்தார். இந்நிகழ்வினை 2ம் படைவீடான திருப்பங்குன்றத்தில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும்.ஆனால் நடப்பாண்டு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் … Read more

பக்தனுக்காக 21 நாள் பச்சை பட்டிணி விரதம்..இன்று நிறைவு செய்யும் அன்னை

பக்தனுக்காக இப்பூவுலகில் அன்னையே 21 நாட்கள் பச்சை பட்டிணி இருக்கும் அற்புத நிகழ்வானது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுத்தோறும் அன்னையுடன், பக்தர்களும் இவ்விரத்தை மேற்கொள்வது வழக்கம். சமயபுரம் சுயம்பு மாரியம்மன் கோவில்  கடந்த மார்ச்.,8ந்தேதி அன்று பச்சை பட்டிணி விரதத்தை தொடங்கிய விரதம் 21 நாட்கள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.விரதம் முடிந்தவுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று சித்திரை திருவிழா நடைபெறும.ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. … Read more

இன்று சதுர்த்தி வேழமுகத்தனை வேண்டி நிற்போம்!துன்பங்கள் நீங்க வழிபடுங்கள் கற்பக களிறை..!

இன்று சதுர்த்தி அதுவும் வளர்பிறை சதுர்த்தி இந்த தினத்தில் அந்த வேழமுகத்தவனை மனதார வேண்டி நின்றால் மலை போல் வந்த துன்பம் பனி போல் விலகும்.கற்பக மூர்த்தி மிகவும் எளிமையானவர் எந்த நிலையிலும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு கற்பக விருட்ஷமாக வேண்டியதை அள்ளி கொடுப்பதில் அவருக்கு நிகர் எவர் என்று எண்ணும் அளவிற்கு ஏற்றத்தை அளிப்பவர் அவரை இந்த தினத்தில் வேண்டி நின்றால் நம்மை துன்பத்திற்கு ஆளாக்கும் எந்தவொரு செயலையும் தவிடு பொடியாக்கி விடுவார் கற்பக களிறு.அவரை … Read more

தீர்க்கசுமங்கலி பவ..என்று திருவருளும் காரடையான் நோன்பு இன்று!கட்டாயம் கடைபிடியுங்கள்

கணவனோடு மகிழ்ச்சியாகவும், சுமங்கிலியாகவும் வாழவேண்டும் என்பது தான் மனைவியின் எகோபித்த எண்ணமாகும். காரடையான் நோன்பு   சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக ஏற்பட்டது.  மாசியும் பங்குனியும் கூடுகின்ற நேரத்தில் விரதம் இருப்பது தான் காரடையான் நோன்பு. இவ்விரதத்தை மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பது வழக்கம். இந்த நோன்பை காமாட்சி நோன்பு என்றும்  கெளரி நோன்பு என்றும் சாவித்திரி விரதம் என்றும் கூறுவார்கள். திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் … Read more

28 நாட்கள் பக்தனுக்காக பச்சைபட்டணி விரதத்தை தொடங்கினாள் அன்னை..!

சமயபுரம் மாரியம்மன் என்றலே தனிச்சிறப்பு தான் அதிலும் அன்னையின் கருணை அளவற்றது.இக்கோவிலில் தான் அன்னை அஷ்ட புஜங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.அன்னையின் இந்த திருக்காட்சி வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத ஒரு அரிய திருக்காட்சியாகும்.மாரியம்மன் திரு வடிவங்களில்  சமயபுரம் தான் ஆதி பீடம் ஆகவே தான் அன்னை  மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருஉருவமாக காட்சியாக அருள்பாலிக்கிறார். மும்மூர்த்திகளை காக்கவும், அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை … Read more

கேட்டதைக்கொடுக்கும் தைப்பூச விரதம் கடைபிடிக்கும் வழிமுறையும்- பலன்களும்..!

இன்று தைப்பூசம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.முருகனுக்கு உரிய விஷேசமான நாட்களில் இந்நாளும் ஒன்று.தைப்பூச தினத்தில் அந்த அழகனை நினைந்து உருகும் அடியார்களுக்கு சொல்லி வரமளித்து வருகிறார் முருகன் இதனை வார்த்தையால் அறிந்து கொள்ள முடியாது அனுபவத்தினால் அறியலாம் அதற்கும் அவனின் அருளால் தான் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை இதனை அறிந்தவர்கள் அதிகம்.அவ்வாறு தை மாதத்தில் பூச நட்சத்திரமும்,பவுர்ணமிதிதியும் இணைந்து வரும் நாளில் தான் தைபூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் அய்யனுக்கு விரதமிருந்து அவரை … Read more

சுகமான வாழ்வுத்தரும் சூர்ய வழிபாடு..இன்று ரத சப்தமி.. விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி அறியலாம்.!

வாழ்க்கையில் வளங்களை அருளும் ரத சப்தமி இன்று நடைபெறுகிறது. விரதம் இருந்து எவ்வாறு அனுஷ்டிக்கலாம் என்று காண்போம் இன்று ரதசப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விழா நாயகனாக திகழ்பவர் சூரிய பகவான் அவரை விழிமேல் வழிவைத்து வழிபட வேண்டிய நாளாகும்.ஆரோக்கியத்தை அருள்பவர் கண் முதலான நோய்களை விரட்டுபவர்,ஞானம் அளிப்பவர் அவரை நினைத்து வழிபட்டால் நினைத்தை நிறைவேற்று தருவார் ஆதித்யன்.அவரை விரத மூலமாக  வழிபாடு நடத்தினால் இன்னும் சிறப்பு என் கிறார் .அப்படி விரத வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமாக நம்முடைய … Read more