லட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா (மத்திய அரசு) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லட்சத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கவரட்டியில் சுமார் ரூ.1150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதுபோன்று நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன்பின் பிரதமர் கூறியதாவது, லட்சத்தீவின் நிலப்பரப்பளவு சிறியதாக […]
ஜப்பான் நாட்டில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், ஹனடே ஏர்போர்ட்டில் இறங்கியபோது பயங்கரமாக தீப்பிடித்தது. பயணிகள் விமானமான ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) தரையிரங்கும்போது, ஹனடே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதில், முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமான விமானத்தில் பயணித்த 379 பயணிகளும், நல்வாய்ப்பாக சரியான நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அந்த […]
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனைய திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையத்தை திறந்து வைத்தார். முன்னதாக புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து கேட்டறிந்தார் பிரதமர். இதையடுத்து, ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் […]
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் கருப்புக்கொடியுடன் பேரணி சென்றனர். மக்கள் பேரணியை தொடர்ந்து, கோட்டாட்சியர், டிஎஸ்பி, தாசில்தாரர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து […]
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்களின் பேரணி பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் போராட்ட குழுவினர். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் பேரணி நடைபெற்றது. ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் மற்றும் விவசாய அமைப்பினர் […]
சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக எம்பி கனிமொழி மற்றும் சோமு இருவரும் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.
ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. ஸ்கைட்ராக்ஸ், 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமானநிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில், டெல்லி விமான நிலையம் கடந்த ஆண்டு 45வது இடத்தில் இருந்து 37வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 2021 இல் 71 வது […]
சென்னை:விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சென்னை,கோவை,திருச்சி,மதுரை,சேலம்,தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தலைமைச்செயலகத்தில் தற்போது வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பேண்டில் தடவி கடத்தியதை பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பயணி அணிந்திருந்த டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தார். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்டை அவர் தடவியிருந்துள்ளார். மேலும், கடத்தி வந்த அந்த நபரிடம் […]
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் மடிந்துள்ளனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 14-ம் தேதி வரை சர்வதேச விமான நிலையங்கள் ரத்து என மத்திய அரசு அறிவித்து உள்ளது.மேலும் இந்த தடை அறிவிப்பு சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது […]