ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தினர் நடத்திய சோதனையின் போது இரண்டு தனித்தனி நிகழ்வுகளில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். முதலில் நடத்திய சோதனையின் போது ரூ.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர். பின்னர் ரூ.44.60 லட்சம் மதிப்பிலான 1.4 கிலோ கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.