வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் […]
சென்னை முதல் யாழ்ப்பாணம் வரையிலான விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் பெரும்பாலும் நீங்கி விட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்டுப்பாடுகள் இன்னும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த ஒரு சில கட்டுப்பாடுகளும் தற்போது நீங்கி வருகின்றன. அந்த கட்டுப்பாடுகள் நீங்கும் போதுதான் கொரோனா கட்டுப்பாடு என்பதே நமக்கு நியாபகம் வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டரை வருடம் தடைப்பட்டு இருந்த சென்னை முதல் யாழ்ப்பாணம் […]
‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? என டி.ஆர்.பி.ராஜா ட்வீட். ‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி- விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் விலை ரூ.17,800 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் மாநில […]
மதுரை – சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில்,கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரை – சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி,சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு […]
இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ஓமைக்ரான் பரவல் அதிகமாக பரவி வந்தது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்து பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தான் உடனான விமானப் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தற்பொழுதும் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய […]
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணிக்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் பயணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சமீபத்தில் கொரோனா தொடர்பான பயண விதிகளை மாற்றியுள்ளது. அதில் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வருவதற்கு அனுமதித்துள்ளது. மேலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்தியவர்களுக்கு அந்நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து புதிய கொரோனா பயண […]