“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. […]