Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் […]
கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான கல்வி மானியக் கோரிக்கை உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. […]
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலும்,தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் திமுக அரசு விடுவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் […]
விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் என்றும்,எனவே, தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு,அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை […]