நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பூகம்பமாய் வெடித்து. இதற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநில திரையுலகினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக […]
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது […]
மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியையும் எங்களையும் ஒப்பிட முடியாது. எனவே, மதநல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் விசிக, இடதுசாரிகள் மனு அளித்துள்ளனர். காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு , மதசார்பின்மையை வலியுறுத்தி சமய நல்லிணக்க மனிதசங்கிலி பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகள் என மூன்று கட்சியினரும் ஒன்றாக காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர் […]
பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார். வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் […]
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு […]
ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமேசான் ஒடிடியில் வெளியானது.இப்படம் பொதுமக்கள்,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றது. எனினும்,இப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும், குற்றவாளி கதாபாத்திரத்தின் […]
புரட்சியாளர் சேகுவேராவின் 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி தெரிவித்துள்ளார். அர்ஜெண்டைனாவில் பிறந்தவரும்,மார்க்சிஸ்ட் புரட்சியாளர், மருத்துவர், எழுத்தாளர்,கொரில்லா தலைவர், இராஜதந்திரி மற்றும் இராணுவ கோட்பாட்டாளர் மற்றும் உலகம் முழுவதும் கலாச்சார அடையாளமாகவும் மாறிய சேகுவேரா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடினார். விடுதலைக்கு பின்னர், கியூப நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர். அதன்பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக தன் நாட்டையும் […]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் பாஜக வன்முறை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் […]
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். […]
சிஏஏ சட்டத்தால் சொந்தமாக நிலமோ,வீடோ இல்லாத இந்தியர்கள் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்நிலையில்,குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வந்ததற்கு,தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரவேற்கிறோம்: “குடியுரிமைத் […]