நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தாம்பரத்திலுள்ள விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பீஸ்ட் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 100 பேருக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.