ED Raid: அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது. Read More – அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் […]
அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு […]
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி ஓபிஎஸிடம் கேட்கப்பட்டபோது, ‘ அரசு அவர்கள் கடமையை செய்கின்றனர். குற்றமட்டவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.’ என தனது கருத்தை தெரிவித்தார். இன்று தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது, அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் […]
அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சி மாற்றம் வரும்போது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தான் பிரச்சனை. – ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார். தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைதாங்கி பேசினார். அதே போல, மற்ற மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். அதே […]
புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர். கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் […]
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு, இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுக முன்னாள் […]