Election2024: மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவை 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]